இறை இரகசியம்

இறை இரகசியம்

இந்த உலகியலில் காரண காரியமின்றி நாம் பிறப்பதில்லை. உங்களின் வினையின் பதிவால் அதற்கொப்ப மனிதர்களிடம் தொடர்பில் இருக்கின்றீர். உயர்ந்த காரியங்கள் செய்து விடுபட்டு இருந்தால், அதனை முழுமையாக்க உன்னதமான ஆன்மாக்களை சந்திக்கிறீர். இந்த உன்னதமான உணர்வில் நீங்கள் அடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பல துன்பங்களை காண்கிறீர்கள், கண்டீர்கள். இந்த துன்பங்கள் தான் உங்களை ஞானப் பாதைக்குள் கொண்டு வந்துள்ளது என்பதனை உணர்வீர். ஞானநிலையில் பயணிக்க வேண்டிய கடமையை உணர்ந்து, இன்ப துன்பங்களை சமமாக பாவித்து, நற்தொண்டுகள் செய்து வரும் வேளையில் நீங்கள் நினைத்து பயணிக்கும் ஆன்ம அன்பர்கள் உங்களுடன் ஆன்மவிளக்காய் இருப்பார்கள்.  எல்லா காரியங்களும் ஜெயம் உண்டாகும்.

 

ஞானம் இல்லாமல், பற்றுக்களுக்காக இந்த வாழ்க்கையில்

பயணித்து பரமனை சேராதோர் எண்ணில் அடங்கார். இந்த நிமிடத்திலிருந்து ஓர் காரியம் செய்யுங்கள். இன்றிலிருந்து மனிதர்களிடம் பேதம் கொள்ளாதிருங்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். தங்களை தாங்களே உயர்ந்தவர் என்றும், சாதி, மதம், பணம் என்ற மூப்பேயின் மூலம் உயர்ந்தோர் என்று கருதிக்கொண்டு, உங்களை இகழ்ந்தவரை, தூற்றியவரை மறந்து விடுங்கள். எவ்வித எதிர்பார்ப்பின்றி உங்களால் இயன்ற தொண்டுகளை சிறப்பாக செய்யுங்கள். மனதில் நம் வாழ்க்கையில் அனுதினமும் ஒருவருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுங்கள். குழந்தைகளை தெய்வமாக கருதுங்கள். எதிர் மறை எண்ணங்கள் உங்கள் சூட்சும உடலை தீண்டும் போது, உங்கள் நற்செயல்களால் உண்டான நல்ல நேர்மறை எண்ணங்கள் அதனை தாக்கி உங்களை காப்பாற்றுவதை உணர்வீர்கள். இங்கு எல்லோரும் நல்லவர்களே, சிலரின் எண்ணங்கள் தவறாக இருப்பதால் அவர்கள் அப்படித்தான் என்று கருதி அந்த ஆன்மாக்களை வணங்குங்கள், அப்போது உங்களுக்கு வஞ்சம், கர்வம், ஆணவம், அகந்தை, வெற்றி, தோல்வி, பொறாமை என்ற எந்த உணர்வும் ஏற்படாது. உங்களின் செயலில் நல்ல வேறுபாடுகள் காண்பீர்கள், பின் ஓதாமல் உணர்த்தப்படும், இறை இரகசியம் தன்னாலே ஆட்கொண்டுவிடும்... இனிய ஜீவ அமிர்த காலை வணக்கங்கள்

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்