ஸ்ரீ சக்திவேல் பரமானந்தர்
ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சாமிகள் தென்னார்க்காடு மாவட்டத் திலுள்ள கடலூரில் 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். இவர் சாத்திரங்களின் வலுவை உணர உணர மந்திர…
ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சாமிகள் தென்னார்க்காடு மாவட்டத் திலுள்ள கடலூரில் 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். இவர் சாத்திரங்களின் வலுவை உணர உணர மந்திர சக்தியின் அற்புதம் அவருக்கு உணர்த்தப்பட்டது. இளம் வயதிலேயே அவரது தந்தையார் இயற்கை எய்தினார். இதன் காரணமாக அவருடைய பூர்வீக சொத்துக்கள் யாவும் பிரிக்கப்பட்டன. ஐந்து சகோதரர்கள் நிரம்பிய அவரது குடும்பத்தில் மொத்தச் சொத்துக்கள் ஐந்து சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. அவர் இளம் வயது சிறுவனாக உள்ள நிலையில் அவருடைய பாகம் யாரிடம் கொடுக்கப்படவேண்டும் எனப் பெரியவர்கள் ஐயப்பட, சகோதரர்கள் நால்வரும் அவரையும் அவரது சொத்துக்களையும் வைத்துப் பராமரிக்க நீ நான் எனப் போட்டியிட்டனர் சாமிகளின் உடன் பிறந்தவர்கள்.
பின்னர் ஆளுக்கொரு வருடம் சக்திவேலை வைத்துக்கொள்வது என்றும் சொத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை அவரது பராமரிப்புச் செலவுக்கு எடுத்துக் கொள்வது என்றும் முடிவாயிற்று. முடிவின் படியே ஆளுக்கு ஒரு வருடம் வைத்து சக்திவேலை வளர்த்தனர். ஆனால், அவர்களின் கவனம் முழுவதும் சொத்துக்களை களவாடுவதிலேயே எண்ணம் தோன்றியதே தவிர அவருடைய பராமரிப்பில் நலம் ஏதுமில்லை. இந்நிலையில் சாமிகள் தனக்காகவும் தன்னுடைய சொத்துக்காகவும் சகோதரர் களுக்குள் சண்டை தொடர்வதை அவர் விரும்பவில்லை. அதன் காரணமாக தம் சொத்துக்கள் அனைத்தையும் நான்கு சமபாகசங்களாகப் பிரித்து தம் சகோதரர்களுக்கு வழங்கிவிட்டு தனியே வெளியே புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
சாமிகளுக்கு சிறுவயது முதற்கொண்டு தேவி பராசக்தியை வணங்கும் சிறந்த பக்தராக விளங்கிய அவர் எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் தன்னுள் ளிருப்பதை அறிந்துணர்ந்தார். ஆத்ம ஞானமே தமக்குத் தேவை. ஆத்ம தரிசனமே தாம் காணவேண்டிய காட்சி என்ற நிலையில் கங்கை, காசி, ஹரித்துவார், பண்டரீபுரம், காஷ்மீர் போன்ற பகுதிகள் யாவும் சுற்றினார். இதன் விளைவாக, மன அலைச்சல் ஒடுக்கம் பெற்றது, சித்தர்கள் நடமாடும் இமயமலைக்கும் சென்றார்.
பற்றற்ற நிலையில் ஒன்றினில் ஒன்றாக ஒன்றி வாழ்ந்தார். அவர் நினைத்ததெல்லாம் பரமனை ; சிந்தித்ததெல்லாம் பரந்தா மனை; எண்ணியதெல்லாம் ஏகப் பொருளை, எங்கும் இறைவன் மயம் என்ற உணர்ச்சி அவருள்ளே பொங்கி வழிந்தது. அதனால் தரையில் கால் வைத்து நடக்கவும் கூசினார். மக்கள் பேசுவதைப் பார்த்து இறைவன் அவர்கள் உருவில் பேசுகின்றார் என்றும் சொல்லுவார். நாய்கள் குரைக்கும். அதை வைத்து இறைவன் இவ்வடிவத்தில் பேசுகின்றார் என்று அவற்றினிடையே விளையாடுவார். கதிரவனின் பிரகாசத் தைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவார். உன்னை என்னால் தொட முடிகின்றதே என்று மகிழ்ச்சியடைவார். அந்நெருப் போடு கொஞ்சி விளையாடுவார்.
குண்டலமான முகம், குமிழ் சிரிப்பு, அருட்பார்வை, சாதாரண நடுத்தர உயரம், எலுமிச்சம் பழம் போன்ற மேனி, இறைவா நீ எங்குமிருக்கின்றாய், உன்னை நான் எங்கும் பார்க்கிறேன் உன்னிடம் பேசுகின்றேனே இதைவிட எனக்கு ஒன்றுமே வேண்டாம். இப்படியே இருந்தால் போதும், என்று ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டேயிருப்பார். உடம்பு முழுவதும் அவர் கண்ணீரால் நினையும், ஒரே அன்பு மயம், இமயமலை வரை சென்று பின்னர் சாமிகள் புதுவை இரயில்வேகேட் அருகில் ஓர் காட்சியை பராசக்தி அன்னையின் வடிவில் அரூப நிலையில் தரிசித்தார்.
அவளைத் தினமும் வழிபட யந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங் கினார். தினசரி பூசை, ஏழைகளுக்கு மூலிகை வைத்தியம், பக்தர்களின் குறைகளைத் தீர்த்தல், இப்படியாகத்தம் வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் வெளியூர்களிலிருந்தும் நிறைய மக்கள் இவருடைய தரிசனம் நாடி வர ஆரம்பித்தனர். சாமிகள் ஆனந்த மயமாக லட்சுமி கடாட்சமுள்ள முகமாகக் காட்சியளித்தார். பாமர மக்கள் வந்து குவிந்தனர். நோயற்றவர்களின் நோயை குணமாக்கினார். அப்பகுதி மக்களின் துன்பம் சிறுகச் சிறுக மறைந்தது. யாராவது தங்கள் குறைகளைச் சாமிகளிடம் கூறினால், இதோ இறைவன் இருக்கின்றானே கஷ்டமெங்கே? ஆனந்தமாய் போ என்றார். வந்தவரின் கஷ்டம் அக்கணமே மறைந்திடும்.
இத்தகு முறையில் சாமிகளைக் காலை தரிசனம் செய்தால் அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மக்கள் கண்டுணர்ந்தனர். நம்பிக்கையும் ஏற்பட்டது. வயது வளர்ச்சியுடன் அவரு டைய பேரன்பு பிரபஞ்சம் முழுவதும் பரவத் தொடங்கியது ஒரு நாள் மாலை அப்படியே அமர்ந்திருந்தார். எதையோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு வினவினார்கள். அங்கே ஆண்டவன் சிரிக்க போகிறார். ஆயிரம் ஆயிரமாயிரம் பேர் வாழப் போகிறார்கள் என்று ஆனந்தத்தில் மகிழ்ந்தார். தன் வேட்டியை எடுத்துக் காட்டி துணிவரப் போகிறது. துணி வரப்போகிறது என்று சிரித்தார். மக்களை பார்த்தும் சிரித்தார்.
எந்த ஒரு விருந்தினரும், வந்த ஊரில் நீண்ட காலம் தங்க மாட்டார்கள். அது போன்றே சாமிகளின் ஆத்மா அக்கூட்டி னுள் வந்து தங்கி மனித காலத்தையும் தாண்டி விட்டது. மன அமைதி நாடி வரும் அன்பர்களின் மனதில் இறைவன் நிழல் புலப்படச் செய்வார். இறைவனின் படைப்புத் தத்துவத்தை மற்றவர்களுக்கு சுட்டி காட்டி அவர்களும் அந்த ஆனந் தத்தை ஏற்கும்படி செய்தார். மக்கள் அனைவரும் அவரின் இயற்பெயரான சக்திவேல் என்பதனை சக்திவேல் பரமா னந்த சாமிகள் என்று வழங்கலாயினர்.
இரவிலும் பகலிலும் சாமிகள் உறங்குவதேயில்லை. இந்நிலையில் ஒரு நாள் சாமிகள் பரமானந்தத்தில் திளைத்து சமாதி நிலையில் மூழ்கிவிட்டார். இவ்வகையில் தியான நிலையில் அமர்ந்த சக்திவேல் பரமானந்த சாமிகள் ஆடி மாதம் 23ஆம் நாள் பரிபூரண நிலையை திடைந்தார். சாமிகளின் சீடர்கள் அவர் விருப்பப்படியே, அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் அவரை சமாதி செய்து வழிபட்டனர். பக்தர்கள் அருளாளர்கள் ஆத்ம சாதகர்கள் அனைவரும் கூடினர். புதுவையில் உள்ள முதலியார்பேட்டை, இரயில்வே கேட் அருகில் சாமி அருளுடலை ஜீவ அடக்கம் செய்தனர். சாமிகள் பூஜித்த எந்திரம் அங்கேயே உள்ளது. சாமிகள் பரிபூரணமான தனத்தை அதாவது ஆடி 23ஆம் நாளை குருபூசையாகக் கொண்டாடினர்.
நாடிவரும் பக்தர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நியாயமான வேண்டுதல் களையும் இன்றுவரை நடத்தி அருள் பாலிக்கின்றனர். சக்திவேல் பரமானந்த சாமிகளின் சீடர்கள் ஒருவர் பின் ஒருவராக இறைவனடியை அடைந்தார்கள். அவர்களையும் அவருடைய குருநாதரைச் சுற்றி சமாதி செய்தனர். சாமிகளின் காலம் கி.பி.1850&-1880 வரை என கணக்கிடப்படுகிறது.