ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

திருவண்ணாமலை சித்தர்கள் மகான் அடங்கிய புண்ணிய பூமி அத்தகைய பெரியோர்களில் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரும் ஒருவர். அவர் வாழ்ந்த காலம் 1750முதல் 1829 வரையாகும் .…

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

திருவண்ணாமலை சித்தர்கள் மகான் அடங்கிய புண்ணிய பூமி அத்தகைய பெரியோர்களில் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரும் ஒருவர். அவர் வாழ்ந்த காலம் 1750முதல் 1829 வரையாகும் . திருவண்ணாமலை ஈசான்ய திசையில் நெடுங்காலம் தங்கி இருந்து வாழ்ந்ததால் ஈசான்ய ஞான தேசிகர் என பெயர் பெற்றார் .

 ஈசான்ய ஞானதேசிகரின் தந்தையார் திருநீலகண்டர்.  ராய வேலூரில் இளமைக் காலத்தில் கந்தப்பன் என்ற பெயரில் வாழ்ந்த ஞானதேசிகருக்கு 7வது வயதில் சிவதீட்சை செய்யபட்டு பின் தேசிகர் என பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

பின்னாளில் திருமண ஆசை விடுத்து சிவாலயங்கள் மனம் தேடலில் ஈடுபட்டு தில்லையம்பதியில் சிவபெருமானின் தரிசனம் ஞானதேசிகருக்கு கிட்டியது .அங்கு மௌனகுரு சுவாமிகளின் ஆசியும் குருவருளும் ஈசான்ய ஞானதேசிகருக்கு கிட்டியது . பின் மௌனகுரு சுவாமிகள் மேல் குருபக்தி கொண்டு பஞ்சரத்தினம் என்ற பாமாலைப்பாடினார்,

குருவிடம் யோக ஞானம் கற்ற கந்தப்ப தேசிகர் யோகபட்டை, யோகதண்டு ஆகியற்றை பெற்று ஜடாமுடி தரித்து ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் விடைபெற்றுச் சென்றார்.  பின் தில்லையம்பதி விட்டு புறப்பட்டு திருவாருர் தியாகராஜ சுவாமிகளை தரிசித்து பின் மடப்புறம் குரு தட்சணாமூர்த்தி சுவாமிகளுடன் சிலகாலம் வாழ்ந்தார் கந்தப்பர் எனும் ஈசான்ய ஞான தேசிகர். பின் வடதிசை நோக்கி திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்து அருகில்

ஒரு குகையில் தங்கி தவம் புரியத் தொடங்கினார். ஞானதேசிகர் தவம் செய்வதை கண்ணுற்ற முத்துச்சாமி தினமும் தனது பசு மாடுகளின் பாலை தேசிகருக்கு கொடுத்து வந்தார். அவர் வீடு கட்டும் போது அங்கு புதையல் கிட்டிட திடிரென பெரும் செல்வந்தராய் உயர்ந்தார்.

இதைக்கேள்விப்