உன்னை கவனி.. அதுவே சிவ உறவு…
உலகப் பற்றுக்களை விட்டு விலகுவதென்பது சாதாரண செயல் அல்ல. அப்படி நீங்கள் பற்றுக்களை விட்டு விலக நேரிடும்போது, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அதாவது உங்களை…
உலகப் பற்றுக்களை விட்டு விலகுவதென்பது சாதாரண செயல் அல்ல. அப்படி நீங்கள் பற்றுக்களை விட்டு விலக நேரிடும்போது, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அதாவது உங்களை பற்றி யாருமே தெரிந்துக் கொள்ளாத வகையில், உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த உலகத்தில் இல்லாதது போலவே உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டும். உங்களுடைய நட வடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும். நீங்கள் இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம். ஆன்மீகத்தின் வெடிப்பை அப்போது
தான் உங்களால் அடைய முடியும். இல்லையென்றால், அகந்தை எப்போதும் ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும். நீங்கள் எதற்காக கவனிக் கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ஏனென்றால், நீங்கள் யார் என்பதைப் பற்றி உங்களுக்கு நீங்களே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்படியானால்
நீங்கள் கவனிக்கப்படுவதன் மூலம், நீங்கள் யார் என்பது எப்படிப் புலனாகும்? நீங்கள் உங்களைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது? அவர்கள் உங்களை பாராட்டு கிறார்
களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்ட தாக இருக்க முடியாது. நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.
நீங்கள் உங்களைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களின் உள்ளுக்குள் செல்ல வேண்டும். ஏனெனில் கவன ஈர்ப்பில்தான் அகந்தை வாழ்கிறது. அது ஒரு தவறான விஷயம், அதைப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியே வாருங் கள். நீங்கள் அதிலிருந்து மீண்டுவிட்டால் வித்தியாசமான ஒரு அமைதியும், நிம் மதியும், சாந்தமும் உங்களுக்கு ஏற்படும். இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரம சுகம் உங்களுக்குள் பொங்கத் தொடங்கும்.
ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும். அதை நீங்கள் அடையாத வரையில், நீங்கள் வாழ்வது போலியான வாழ்க்கை. நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை, ஆனால் உங் களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
ஆதலின் ஞானத்தின் பாதை தெரியும் போது சிவ உறவு உண்டாகும்.. அந்த ஆனந்த தருணமான சிவ உறவு உங்களுள் நிலைக்க வேண்டும், அதுவே உண்மை வாழ்வின் இலக்கு.
நீங்கள் நல்லவராக இருந்தாலும், வல்லவராக உலகை வலம் வந்தாலும், நாடு ஆளும் நாயகராக இருந்தாலும், உலகின் பெறும் பணக்காரனாக இருந்தாலும், தான தர்மம் செய்தாலும், ஈசனின் ஆசி எட்டியவனாக இருந்தாலும், உங்கள் உடலுக்கு நீங்கள் தீங்கு செய்தால், உடல் உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.
நீங்கள் மன்னனோ, கண்ணனோ, உலகம் அறியலாம். உங்களை உங்களின் உடல் அறியாது. உடலை மதிப்பவர்களை மட்டும் உடல் மதிக்கும். தானமும், தர்மமும், பக்தியும் உயிரின் முக்திக்குத் தான், உடல் உறுப்புகளுக்கு அல்ல. உடலை சிதைத்து விட்ட யாராலும் உயிரை முக்தியில் கரைக்க முடியாது.
உங்களது ஆத்ம பலம், உடலை சில முறை காக்கலாம். எந்நாளும் காக்காது. உற்றாருக்கு உலகிற்கு உதவும் நீங்கள், உங்களுடைய உடலை உணராமல் போனால், உடலோடு உறவாடாமல் போனால், உங்களைக் காக்க ஈசனும் முன் வரமாட்டார். உடலுக்குக் கொடுக்கும் மரியாதையே உயிருக்குக் கொடுக்கும் தவம். அதுவே சிவத்திற்கு காட்டும் பக்தி.
உடலைக் கவனித்து உயிரை காக்க சிவம் காக்கும், முக்தி காட்டும். மண் தின்னும் உடல் தானே என உதாசீனம் வேண்டாம். நீங்கள் திண்ணும் உணவை செரிக்கும் உடலே உயிரின் வரம். நீங்கள் உலகோடு பேசும் செயலுக்கு பெயர் சிவ உறவு அல்ல. நீங்கள் உங்கள் உடலோடு, உங்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பு களோடும், பேசும் செயலே சிவ உறவு. நீங்கள் மனதோடு உறவாடப் போனால் காயங்களோடே திரிவாய். மன உறவு மாயம் அறியாது. சிவ உறவை மாயங்கள் தீண்டாது. உங்கள் உடலோடு உறவாடிப் பாருங்கள், ஆனந்த லோகம் காண்பீர்கள்.உயிருக்கு உயிரான உறவு உடலே, உயிருக்கு சிவ உறவு உடலே. அந்த உடலுக்கு சிவ உறவு உயிரே. எந்த உயிரின் சிவ உறவு சிவமே…