கடவுளை சூட்சுமத்தில் காணலாம்

முருகனைக் கண்டேன் – கண்ணனைக் கண்டேன் – அம்பிகையை கண்டேன் – என்று சொல் பவர்கள் சிலர் பொய் சொல்லலாம்? ஆனால், பலர் உண்மையைச் சொல்கிறார்கள்…. நேருக்கு…

கடவுளை சூட்சுமத்தில் காணலாம்

முருகனைக் கண்டேன் – கண்ணனைக் கண்டேன் – அம்பிகையை கண்டேன் – என்று சொல் பவர்கள் சிலர் பொய் சொல்லலாம்? ஆனால்,  பலர் உண்மையைச் சொல்கிறார்கள்…. நேருக்கு நேர் ஸ்தூல உருவில் மனிதர்களைக் காண்பது போல் தன் இஷ்ட தெய்வத்தைக் கண்ணால் காண்பது முற்றிலும் உண்மை.

அவர்களில் சிலர் ஸ்தூல உருவத்தில் கண்டதும், இஷ்ட தெய்வத்துடன் பேசியதும் உண்மை….

ஆனால் இந்த பக்தர்களுக்கு தாம் இஷ்ட தெய்வம் எங்கிருந்து வந்தது ? எப்படி வந்தது? அது எங்கே குடியிருக்கிறது? எதுவும் தெரியாது!

ஸ்தூல உருவில் எந்தக் கடவுளும் ஆகாயப் பரப்பில் இல்லை. !  களி மண்ணைக் கொடுத்தால் ?  குயவன் எந்த உருவத்தையும் செய்வான் !

இதேபோல்? பக்தன்? தன் பக்தியால்? ஆகாயப்பரப்பில் நிறைந்து பரவியிருக்கும் சக்தி சாகரத்தில் தனக்கு விருப்பமான வடிவத்தை உண்டாக்குகிறான் !

அந்த சாகரத்தில் ஒவ்வொரு துளியும், (அணுவும்), உயிரும், உணர்வும் கொண்டது ஆகும்.  ஆகையால், உணர்வுடைய.. உயிருடைய கடவுள் அதில் காட்சி தருகிறார். அதே போல் உண்மை பக்தன். தன் இஷ்ட தெய்வத்திற்கு. . எந்த குணங்களைக் கற்பிக்கிறானோ .. சாந்தமே உருவானதோ… அல்லது உக்கிர அகோரமானதோ…. அந்த குணங்களைக் கொண்ட உருவம் சக்தி சாகரத்தில் இருந்து உருவாகிறது! ..

கடவுளை தரிசிக்க பக்தனுக்கு…

பாவனா சக்தி நன்கு இருந்தால் போதும்… உங்கள் இஷ்ட தெய்வத்தை முழுமையாகக் காணலாம் !..

பாவனா சக்தி என்பது ? நீங்கள் சிந் தனை செய்கிறீர்களோ ? நற்தேவதை களோ… துர் சக்திகளோ…. அதை உண்மை என நம் மனதில்.. உணர்வுடன் நேரில் பார்த்து உணர்வதுதான்… இந்த . பாவனா சக்தியை சரியாகப் படுத்தி வந்தால்…அதன் மூலம்… நம் வாழ்க்கையியல்.. அனைத்தையும் அடைய.. முடியும்….

அந்த பரிபூரணமான பக்தியினால் ஸ்தூல தேகத்தில் சூட்சுமான இறைவன் தன்னுடைய செய்தியைச் சொல்கிறான். எப்படியெனில் தற்போது திருப்பதி பெருமாள் கோவிலில் தமிழக முதல்வர் பக்தியோடு வணங்கிச் செல்லும்போது அங்கு வந்த ஒரு பக்தர், ÔÔதமிழகத்தின் நிலைமையை சரி செய்! தமிழகம் அழிந்து கொண்டே போகிறதுÕÕ என்று பெருமாள் மூலமாக அறிவுறுத்தினாரே அவ்வாறு!