வேற்றுமைகளைக் கடந்து முக்தியடையுங்கள்..!

நல்லபிள்ளைகள் சிலர், பெற்றவர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். நல்ல பெற்றோர்கள் சிலர் பிள்ளைகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள். உறவு, நட்பு என உற்ற உறவுகள் இப்படி ஒவ்வொரு கோணத்தில் வஞ்சித்து வாழ்வதையே வாழ்வாக…

வேற்றுமைகளைக் கடந்து முக்தியடையுங்கள்..!

நல்லபிள்ளைகள் சிலர், பெற்றவர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். நல்ல பெற்றோர்கள் சிலர் பிள்ளைகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள். உறவு, நட்பு என உற்ற உறவுகள் இப்படி ஒவ்வொரு கோணத்தில் வஞ்சித்து வாழ்வதையே வாழ்வாக கொண்டுள்ளனர். இதற்கெல்லாம் மூலம் யாதெனில், அவரவர் எண்ணத்தின் அடிப்படையில் நடந்த கரும நிகழ்வுகளே. அவை இப்போது அறங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்த வினையே பல நல்ல உள்ளங்களை காயப்படுத்தி விடுகின்றது. அதனால் செயல்களை பற்றாமல் செயல் புரியும் தன்மை வேண்டும்.‌

அன்புள்ளங்களே!! உங்கள் சுற்றத்தில் சிலரின் தேவைகளை அறிந்து, இருப்பதைக் கொண்டு இயன்ற அளவு, எதிர்பாராமல் செய்து விட வேண்டும். வினையின் பாதிப்பு தொடராமல் செயல்களை செய்து, நம்மில் பதிய விடாமல், பற்றற்று வாழ வேண்டும். ஏதோ கடமைக்கு வாழ்வதல்ல! இங்கிருந்து தப்பித்துக் கொள்ள வந்துள்ளோம் என்பதனை நினைவில் வையுங்கள்.

இந்த உறவின், நட்பின் வியாக்யானம் விதியாகி, மதியின் ஆற்றல் வீணாகிக் கொண்டிருக்கின்றது, மதியால் விதியினை வென்று, வாழ்க்கையை வாழ வேண்டும். அதாவது ஆன்ம வாழ்வை அடைவதே வாழ்க்கை என்று உணர்ந்து பயணிக்க வேண்டும். இதனை உணராதவர்களே பிறரை வஞ்சித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ஆகவே உங்கள் மனம் எப்போதும் நன்றி உணர்வுடன், செய்கருமத்துடன் செயலாற்றும் போது மாய உலகத்தின் சோதனைகள் படிப்படியாய் குறைவதை காண்பீர்கள். எந்த செயலிலும் பாடுபடாமல் பண்பட இயலாது. ஆதலின், எவ்வித நன்றியையும் எதிர்பார்க்காமல், சராசரி மனிதராக இல்லாமல் இருந்தால், நீங்கள் பற்றிலிருந்தும் பற்றற்று வாழும் நிலையை அடைவீர் என்பது திண்ணம். இந்த மாயா உலகங்களை முதல் நிலையில் உள்ளோர், மாயா உலகைக் கடந்து ஆன்மீகப் பாதையில் பக்தி பாதையில் நுழைகிறார்கள். இரண்டாம் நிலையில் உள்ளோர், ஆன்மீக உலகைக் கடந்து ஞானம் அடைகின்றார்கள். மூன்றாம் நிலையில் உள்ளோர் ஞான நிலையை கடந்து வேற்றுமை, பிரிவினை என எல்லாவற்றையும் கடந்து முக்தி அடைகின்றார்கள்!

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்