அண்டத்தை ஆளும் வித்தை

இந்த பிரபஞ்சத்திற்கு சூரியனே குருவாக இருக்கிறார். உடலுக்கு உயிரே குருவாக இருக்கிறது. சூரியன் எவ்வாறு பிரபஞ்ச உயிர்களை இயக்குகின்றதோ, அதே போன்று நமது மனமானது நம் உடலையும்,…

அண்டத்தை ஆளும் வித்தை

இந்த பிரபஞ்சத்திற்கு சூரியனே குருவாக இருக்கிறார். உடலுக்கு உயிரே குருவாக இருக்கிறது. சூரியன் எவ்வாறு பிரபஞ்ச உயிர்களை இயக்குகின்றதோ, அதே போன்று நமது மனமானது  நம் உடலையும், உயிரையும் இயக்குகின்றது. நாம் இந்த பிரபஞ்சத்தில் ஒரு அணுவை விட குறைந்த அளவிலே இருக்கின்றோம். ஆனால் நம்முடைய பிண்டத்தினால் இந்த பிரபஞ்சத்தையே உள்ளடக்கும் தன்மை இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.

இப்பூமி என்பது பரம். இப்பூமியின் பரத்துக்குள் படர்ந்து விளைந்து வெளிப்படும் சக்தியே பரமாத்மாவாகும். ஜீவாத்மாவான நாம்,

இந்த பரமாத்மாவோடு கலப்பதே, நிலைத்த மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த பிரபஞ்சம் எப்படி படைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்த எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் நாமும் படைப்போராக விளங்க முடியும். நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதே சித்தாந்தம். ஆக நம் உள்ளங்களில், அறியாது பற்றியிருக்கும் இயல்பற்ற செயல்களான இருள்களை நீக்கி, இயல்பாக இருந்தால் போதும், மெய்ப்பொருளான சீவனை காணலாம்.

மனமான குருவின் மூலம் காணும் நல்ல உணர்வுகள் நம்மை ஆன்ம வாழ்வில் உயர்த்தும். தன்னால் சீவன் மிளிரும்.  உயிர்கள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, ஆற்றலோடு இருப்பதை போன்று. இந்த பேரண்டத்தின் சக்தியானது நம்முள் பரவிக்கொண்டு தான் இருக்கின்றது. அதனை உணர்ந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் தான். ஆக, நிகழ்வின் தருணங்களில் வாழ்ந்தால், அண்டத்தினை நாம் ஆளலாம். எல்லோர் வாழ்விலும் நல்ல மாற்றம் உண்டாகட்டும். வெளிப்படையாய் வாழ்ந்து வெளியான பாழ் வெளியில் மகிழ்ந்து பரவெளியில் மகிழ்ச்சியாக இருப்போமாக.

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்