ஜீவ சமாதிகளின் பேராற்றலை உணருங்கள்..!

ஜீவ சமாதிகளின் பேராற்றலை உணருங்கள்..!

இந்த உலகியலில் எத்தனையோ சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உலக நன்மைக்காக தோன்றி கொண்டே இருக்கின்றார்கள். நீங்களும் அதனை அடையவே இங்கு பிறந்துள்ளீpர்கள் என்பதே உண்மை. அந்த அற்புத நிலையை அடைய, உங்களுக்கு எல்லா நிகழ்வுகளும் பிரபஞ்ச ஆற்றலின் மூலமாக இயல்பாகவே நடக்கின்றது.

ஆகையினால், இந்த பக்தி வழிபாட்டு நிலைக்கும் அப்பால் உள்ள ஞான மார்கத்தை அடையும் நிலைக்கு வழியும் ஏதுவாக நிகழ்கின்றது. அதுவே ஞான வாழ்விற்கான சிந்தனையை உங்களுக்குள் இயல்பாகவே ஊற்றெடுக்க வைக்கும். மற்றபடி நீங்கள் பயிற்சி, தீட்சை மூலம் ஞானத்தை பெற்று விடலாம் என்று நினைத்து எங்கேயும் சென்று சிக்கி கொள்ளாதீர், அது இயலாது.

எதிர்பாராமல் இன்பத்தையும், துன்பத்தையும் கடந்து விடுங்கள். வினையின் மூலம் நீங்களே. ஆதலால் யாரையும் பயிற்சி, தீட்சை என்ற பெயரில் நம்பி பயணிக்க வேண்டாம்.

ஏனெனில் தூரதேசத்தில் யாத்திரை கொள்வது, மனம் விரும்பாத ஒவ்வாத இடங்களுக்கு தியானம், தவம் என்ற பெயரில் நம்பிக்கொண்டு சென்று ஏமாறாதீர்கள். உங்களிடம் செல்வத்தை பறிக்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆனந்தாக்கள், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதாக சொல்லி உங்களை அடிமைப்படுத்தி கொள்வர். ஆக உங்கள் செயலே தியானம், வாழ்வே தவம், தவம் என்பதை மற்றொரு வாழ்வாக கருத வேண்டாம், முற்றிலுமாக இயற்கைக்கு மாறாக நம்மை புரட்டிக் கொள்வதும், மாற்றி கொள்வதும் ஞானமல்ல!

உண்மை என்னவெனில் உங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து செயல்களுக்கும் பிரபஞ்சத்தில் பதிந்து, அதுவே உங்களை இப்போது இயக்குகின்ற காரணியாக இருக்கின்றது, அதுவே இயக்குகின்றது என்பதை நீங்கள் உணரும் போது, உங்கள் செயலுக்கு ஏற்ப ஒருவர் வழிகாட்டியாக வந்து வழி சொல்லி செல்வதுதான் வழக்கம். இது தான் எல்லா சித்தர்களுக்கும் நடந்துள்ளது.

சிலர் வகுத்த பயிற்சிகளின் தொல்லையால், பலர் ஒன்றும் காணாமல், அங்கேயும் நான் விதிகளை புகுத்திக் கொண்டேன், பற்றை விடுவதற்கும் தியானத்தில் பட்டம் பெற்றேன். புதியதாய் புகுத்திக் கொள்வதை ஞானம் தவம் எனவும் நினைத்தேன். ஆனால் அதை விட்டு விலகிய பின்பே நுணுக்கிப்பார்க்கும் நுட்பம் அறிந்தேன். நம் இயல்பே, தவத்தின் வாழ்வென்கிறேன், ஞான நிறைவு என்பதற்கு, பிறர்நலன் பேணும் வாழ்வு முக்கியம் என்று உணர்கிறேன், அதனால் வாழ்கிறேன் என்று நீங்கள் உங்களை உணர்வதே சிறப்பு. ஏனெனில், அதுபோன்று கூட்டத்தை கூட்டி தியான பயிற்சிகள் கற்று தந்த பெரியோர்கள் பலரும் ஜீவசமாதி அடையவில்லை, முக்தி பெறவில்லை. ஆனால் அவர்கள் மாண்டவுடன் மகாசமாதி என்று சொல்லி விடுகிறார்கள்.

ஆதலால் நல்ல ஜீவ சமாதியை தரிசனம் செய்யுங்கள். அங்கு இருக்கும் பேராற்றலை உணருங்கள். எல்லா பிரச்சினையும் விலகும். மேலும் மெய்ஞானிகள் மற்றும் உண்மையான மகான்கள் மற்றும் யோகிகளின் புகழ் அவர்கள் ஸ்தூல சரீரத்தோடு நடமாடும்போது இருப்பதைவிட, சமாதி அடைந்த பின்பு, அவர்களின் சூட்சும சரீரமானது அதிகமான ஆற்றலோடு இருக்கும். அங்கு செல்லுங்கள், அருமையான உணர்வை அள்ளி பருகுங்கள். சித்தர்கள் பலரும் ஒளி தேகம் அடைந்தவர்கள், நினைத்து வழிப்படுங்கள்.

ஜீவ சமாதி அடைந்த அழுக்கு சுவாமிகள், கோடி சுவாமிகள், குழந்தையானந்தர், சதானந்தர், சச்சிதானந்தர், பாம்பன் சுவாமிகள், இன்னும் பல மகான்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிகளுக்கு தனித்தே செல்லுங்கள். கூட்டம் கூடினால் கூட்டத்தில் தொலைந்தே போவீர். தனிமையில் மட்டுமே ஏகாந்த பேரின்பத்தை உணரலாம்.

இதற்காக தான், 1008 சித்தர்கள், மகான்கள், ஞானிகள் சமாதி அடைந்த இருப்பிடங்கள், எங்கும் ஏமாற்றம் காணாமல், நல்ல மாற்றம் பெறும் வகையில், உலகில் உள்ள எல்லா ஞான இரகசியங்களை உணர்த்தும் நூல்களான,

ஜீவ அமிர்தம், ஞான அமிர்தம் என்ற நூலை வாங்கி படியுங்கள், நீங்கள் வசிக்கும் இல்லத்திற்கு அருகே உள்ள மகான்களை தரிசியுங்கள். வேண்டும் வரத்தை பெறுங்கள். உழைப்பில் தொண்டுகள் செய்து, மனிதர்களை பேதம் காணாமல் வாழும் போது, இந்த பிரபஞ்சம் அருளும் வரம் மிகப்பெரியது.. உணர்வோம்!! வெல்வோம்!!

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்