ExclusiveSiddhar

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

திருவண்ணாமலை சித்தர்கள் மகான் அடங்கிய புண்ணிய பூமி அத்தகைய பெரியோர்களில் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரும் ஒருவர். அவர் வாழ்ந்த காலம் 1750முதல் 1829 வரையாகும் . திருவண்ணாமலை ஈசான்ய திசையில் நெடுங்காலம் தங்கி இருந்து வாழ்ந்ததால் ஈசான்ய ஞான தேசிகர் என பெயர் பெற்றார் .

 ஈசான்ய ஞானதேசிகரின் தந்தையார் திருநீலகண்டர்.  ராய வேலூரில் இளமைக் காலத்தில் கந்தப்பன் என்ற பெயரில் வாழ்ந்த ஞானதேசிகருக்கு 7வது வயதில் சிவதீட்சை செய்யபட்டு பின் தேசிகர் என பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

பின்னாளில் திருமண ஆசை விடுத்து சிவாலயங்கள் மனம் தேடலில் ஈடுபட்டு தில்லையம்பதியில் சிவபெருமானின் தரிசனம் ஞானதேசிகருக்கு கிட்டியது .அங்கு மௌனகுரு சுவாமிகளின் ஆசியும் குருவருளும் ஈசான்ய ஞானதேசிகருக்கு கிட்டியது . பின் மௌனகுரு சுவாமிகள் மேல் குருபக்தி கொண்டு பஞ்சரத்தினம் என்ற பாமாலைப்பாடினார்,

குருவிடம் யோக ஞானம் கற்ற கந்தப்ப தேசிகர் யோகபட்டை, யோகதண்டு ஆகியற்றை பெற்று ஜடாமுடி தரித்து ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் விடைபெற்றுச் சென்றார்.  பின் தில்லையம்பதி விட்டு புறப்பட்டு திருவாருர் தியாகராஜ சுவாமிகளை தரிசித்து பின் மடப்புறம் குரு தட்சணாமூர்த்தி சுவாமிகளுடன் சிலகாலம் வாழ்ந்தார் கந்தப்பர் எனும் ஈசான்ய ஞான தேசிகர். பின் வடதிசை நோக்கி திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்து அருகில்

ஒரு குகையில் தங்கி தவம் புரியத் தொடங்கினார். ஞானதேசிகர் தவம் செய்வதை கண்ணுற்ற முத்துச்சாமி தினமும் தனது பசு மாடுகளின் பாலை தேசிகருக்கு கொடுத்து வந்தார். அவர் வீடு கட்டும் போது அங்கு புதையல் கிட்டிட திடிரென பெரும் செல்வந்தராய் உயர்ந்தார்.

இதைக்கேள்விப்பட்ட மக்கள் தேசிகரி டம் பொருள் வேண்டி நிற்க மக்களின் அறியாமை தொல்லையிலிருந்து விலகி, அங்கிருந்து கிளம்பி அண்ணா மலையில் கோரக்கநாதர் குளக்கரைக்கு வந்து தவமிருந்தார். அருணாசலம் என்பவர் குழந்தைப் பேருக்காக வந்து வேண்ட ஈசான்ய ஞான தேசிகர் அருளால் குழந்தைப்பேறு கிட்டியது .அக்குழந்தைக்கு முருகப்பர் என பெயர் சூட்டி திருநீற்றுப் பையை கொடுத்து விட்டதாகவும், அதை இன்று வரை வம்சாவழியாக வழிபட்டு வருகின்றனர் .

 ஞானதேசிகர் எங்கு சென்றார் பல பக்தர்கள் தேட அவர்களுக்கு அண்ணா மலையாரே காட்சி தந்து ஞானதேசிகரை திருவண்ணாமலை ஈசான்ய திசைக்கு வந்து பாருங்கள் . என கனவில் சொல்ல பின் ஞானதேசிகரிடம் உம்பக்தர்களை ஈசான்ய திசைக்கு வரச்செய்துள்ளோம் நீவிரும் அங்கு செல்க என அண்ணாமலை யார் சொல்ல ஞான தேசிகர் ஈசான்ய திசை வந்து தம்மை நாடிவருபவர்களுக்கு அருளாசி வழங்கினார்.  பின் அண்ணாமலையார் கருணையை வியந்து ஞானதேசிகர் தோத்திரப்பாமாலை பாடினார். ஈசான்ய திசையில் ஈசான்ய குளத்தின் தென்கரையில் பெரிய ஆலமரத்தின் கீழ் சிவயோக சீடராய் சமாதி நிலையில் அமர்ந்து தவம் இயற்றினார். தேசிகரின் தவம் செய்யும் போது இரண்டு புலிகள் எப்போதும் காவல் காக்குமாம் .

தேசிகர் நிஷ்ட்டை கலைந்து அண்ணாமலையாரே நம்மை காத்து வருகிறார் என நினைத்து புலிகளை அண்ணாமலை அரசே என தடவி மகிழ்வாராம். பக்தர்கள் வரும்போது புலிகள் வேறு இடத்திற்குசென்று விடுமாம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜடன் துரை என்ற ஆட்சியர் கடும் காசநோயி னால் பாதிக்கப்பட ஞான தேசிகரின் விபரம் கேள்விப்பட்டு வந்து வணங்கி ஜடன் துரை குணமாகினார்.

 ஜடன்துரை உங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென கேட்க “அப்பா எனக்கு எதுவும் வேண்டாம், அதோ இரண்டு குழந்தைகளுடன் ஒர்குடும்பஸ்தர் இருக்கிறார், அவருக்கு எழுதி வையுங்கள் என அண்ணாமலையாரைநோக்கி கை நீட்டினாராம்”. ‘நான் யோகி எனக்கு எதுவும் வேண்டாமென சொல்ல .அதன் படி அண்ணாமலையாருக்கு ஜடன்துரை நிலபுலன்கள் எழுதிக் கொடுத்ததாக வரலாறு. இப்படி பல அற்புதங்கள் நிகழ்த்தினார் சுவாமிகள். ஈசான்ய ஞான தேசிகர் அண்ணாமலையார் தரிசனம் பெற்று பிற்காலத்தில் அருளிய தோத்திரப் பாமாலை, அண்ணாமலை வெண்பா, அண்ணாமலையார் வெண்பா, அண்ணாமலையார் கன்றி ஆகிய பாக்களை இயற்றினார் .

ஜீவசமாதி : இறுதிகாலம் உணர்ந்து தாம் பரிபூரணமாகும் காலத்தை ஓலையில் எழுதி தமது ஆசனத்தின் கீழ் வைத்திருந்தாராம். குறித்த நாளில் ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் தமது சீடர்களை அழைத்து ஸ்ரீ நடராஜப்பெருமானின் அறைக்கட்டுக்கு செல்கிறார். யாமும் அங்கு செல்ல வேண்டுமென முகமலர்ச்சி யுடன் கூறினார் .பின் தேசிகர் பத்மாஷனத் தில் சின்முத்திரை தரித்து உட்கார முதன்மை சீடரான முத்துச்சாமி வாமி அடியேனின் கதி ஏதோ என்று கேட்க, பதிலளித்த தேசிகர் உங்கள்குடும்பமே பழுத்த பழமாகி விட்டதே என திருவாய் மலந்தருளி பரிபூரணம் அடைந்தார்.

 ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிக சுவாமிகள் பரிபூரண பக்குவ காலம் கலியுகம் 4930. சரியான சாலிவாகன சகாப்தம் 1751 கி.பி1829 விரோதி வருடம் மார்கழி மாதம் 26 ஆம் நாள் குருவாரம் மிருக சீரிட நட்சத்திர நன்நாளாகும். ஈசான்ய ஞானதேசிகர் தினமும் ஆசிரமம் பக்கத்தி லுள்ள வில்வமரத்தடி நின்று அண்ணா மலையார் தரிசிப்பது வழக்கம். சுவாமி களை அதே இடத்தில் சமாதி வைத்தனர். விவ்வமரத்தடியில் ஞானதேசிகர் சாமாதி கொண்ட இடமே ஜீவசமாதியாக தற்போதும் வழிபட்டு வரப்படுகிறது . தினந்தோறும் காலை முதல் இரவு வரை பூஜை வழிபாடுகள் காண ஆயிரக்கணக் காண பக்தர்கள் வருகிறார்கள் .   வேண்டுவோர் வேண்டும் வண்ணம் வழங்கும் வள்ளலாக ஞான தேசிகர் விளங்கி வருகிறார் . கோவிலூர் முத்துராமலிங்க சுவாமிகள் ஞானதேசிகர் சமாதியை அனைவரும் வழிபட விரும்பி ஈசான்ய மடாலயம் தோன்ற ஆவண செய்தார்கள் . ஈசான்ய மடம் 150 வருடம் கழித்து பிரமாண்டமாய் நிற்கிறது. திருவண்ணாமலை வந்து ஈசான்ய ஞான தேசிகரின் அருள் பெற்று செல்லுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button