ExclusiveSiddha medicine

கொல்லிமலை மருத்துவ மலை

கொல்லிமலை, இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப் பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந் துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி. 200ல், இந்தப் பகுதியை கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.கொல்லிமலை யில் 18 சித்தர்கள் வாழ்ந்து தவம் செய்துள்ளனர் என்பதற்கு அடையாளமாக கோரக்கர் குகை, ஔவையார் குகை, பாம்பாட்டிச் சித்தர் குகை, கோரக்கர் யாக குண்டம் போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன.

இங்கே வாழ்ந்தசித்தர்களில் முக்கியமாகக் கருதப்படுபவர் கோரக்கர். சாம்பலில் அவதரித்த சித்தர் என்றே இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஒரு சமயம், சிவபிரான், கடற்கரையோரம் பார்வதி தேவிக்கு தாரக மந்திரத்தை ஓதிக்கொண்டிருந்த வேளையில், உமாதேவி சற்றே கண்ணயர்ந்தார். அதே நேரத்தில் சிவன் ஓதிய மந்திரத்தை ஒரு மீன் குஞ்சு கேட்டதன் பலனாக மனித வடிவம் பெற்றது. முக்கண்ணன் அதற்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்டார். அந்த மச்சேந்திரனை சிறந்த சித்தராக மாறி உலகம் முழுவதும் ஞானத்தைப் பரப்புமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே மிகக் கடுமையாக தவம் புரிந்து மேன்மையான சித்தரானார் என்கிறது அவரைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்.

கோரக்கர்

கோரக்கர் இயற்றிய நூல்கள் : கோரக்கர் சந்திர ரேகை, கோரக்கர் நமநாசத்திறவு கோல், கோரக்கர் ரக்ஷமேகலை, கோரக்கர் முத்தாரம், கோரக்கர் மலைவாக்கம், கோரக்கர் கற்பம், கோரக்கர் முத்தி நெறி, கோரக்கர் அட்டகர்மம், கோரக்கர் சூத்திரம், கோரக்கர் வசார சூத்திரம், கோரக்கர் மூலிகை, கோரக்கர் தண்டகம், கோரக்கர் கற்பசூத்திரம், கோரக்கர் பிரம்ம ஞானம்.

கோரக்கர் குண்டத்தில் காடை சம்பா அரிசி, கருங்குருவை அரிசியில் நெய் பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்துப் படைத்து பக்தியோடு யாகம் செய்து, பிறகு சிறிது தூரத்தில் உள்ள கூட்டாற்று மூலையில் தங்கினால் இன்றும் அன்று இரவு சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றும் கொல்லி மலையில் அரங்கநாயகி உடனுறை அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் தினசரி 18 சித்தர்களும் காலை நேரத்தில் ஜோதி வடிவாக வந்து சிவனை வணங்கிச் செல்கின்றனர். இதை உண்மையான பக்தியோடு வணங்குபவர்கள் கண்களுக்குத்தான் ஜோதி வடிவான சித்தர்கள் காட்சி தருவார்கள்.

மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த சித்தர்கள் அங்கு கிடைத்த மூலிகை மருந்துகளைக் கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டித்துக் கொண்டார்கள்.

கொல்லிமலையில் பல இறையதிசயங் கள் அடங்கியுள்ளன. இதை முழுமையாக

அறிந்தவர், தெரிந்தவர் இல்லை . கொல்லிமலையின் இறையதிசயத்தை முழுமையாக அறிந்து உரைக்க மனித மூளையால் முடியாது.

முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லிமலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாக வும் கதைகள் உள்ளன.

இந்த மலையில் ஆயிரக் கணக்கான மூலிகைகள் உள்ளன. இதனால் கொல்லி மலையை மூலிகை மலை எனவும் அழைப்பார்கள். அடுக்கடுக்காக அமைந்திருக் கும் இந்த மலையின் நடுவில் ஒரு அருவி பாய்ந்தோடுகிறது. இந்த அருவி எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்தக் கொல்லி மலையில்தான் 18 சித்தர்களும் சிவபெருமானை குருவாக ஏற்றுச் செய்த குருமுப்பு என்ற மருந்தைத் தயாரித்தார்கள்.

இந்த முப்பு மருந்து நரை, திரை, மூப்பை மாற்றும் வல்லமை பெற்றது. இந்தக் குருமுப்பு மருந்தின் ஒரு பகுதியை 18 சித்தர்களும் தங்கள் மருத்துவப் பணிக்கு எடுத்துக்கொண்டு மீதியைக் கொல்லிமலையிலேயே அரங்கப்பம்மன் கோயில் அருகில் சித்தர்களின் தவசக்தியால் ஒரு பெரும் பள்ளத்தில் வைத்து அதன்மேல் பெரும் பாறையை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கான அடையாளமாக அந்தக் கோயிலின் முன் குறியிடப்பட்டிருக்கிறது. அத்தோடு மருந்துக்குக் காவலாக நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவல் இருக்கப் பணித்தனர். அதன் அடையாளமாகக் கிழக்குப் பக்கம் கருப் பண்ண சாமி சிலையும், மேற்குப்பக்கம் மாசி சின்னண்ணசாமியும், தெற்குப் பக்கம் கொல்லியம்பாவையும், இதற்கு நடுவில் எட்டுக்கை காளியும் இருந்து காவல் காக் கின்றனர். இந்தத் தெய்வங்களை இன்றும் மக்கள் பக்தியுடன் வழிபடுகின்றனர்.

கொல்லிமலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன் மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின்

ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.

முடவாட்டுக்கால் மூலிகையை மனிதனின் கருவிலிருந்து இறுதிவரை மருந்தாகப் பயன்படுத்தலாம். இதை மருந்தாகப் பயன்படுத்த பக்குவம் தேவை. கருப்பை வளர்ச்சி முதல் சிறு நீரகம் சிறுத்துப் போதல், உள்ளுறுப்பு கள் சுருங்காமல் இருக்கச் செய்யும், புற்றுநோயைப் போக் கும். அதோடு எல்லாவிதமான வாதம், பித்தம், சிலோத்தும நோய்களைச் சமநிலைப்படுத்தி

உடலைப் பக்குவப்படுத்தும். முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாத வர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாற்றை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால், அனைத்து நோய்களும் நீங்கிவிடும். ராஜ உறுப்புகள் பலப்பட்டு ஆயுள் விருத்தியாகும்.

மலைகளில்தான் சக்திவாய்ந்த மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. சீரான தட்பவெப்பத்துடன் கூடிய அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை. இந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை மூலிகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இதனுடைய இலை அதிக மருத்துவ குணங்களைக்கொண்டது.

சமதள பூமியில் பயிரிடப் படுவதைப் போலவே இந்த மலை பூமியில் அமைந்துள்ள கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் விளைவதற்கான சீதோஷ்ண நிலை இந்த மலையில் வருடம் முழுவதும் நிலவுகிறது. மேலும், இங்கே காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசிப் பழம், மலை வாழை, கொய்யா, ஏலக்காய், தேன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு என பலதரப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

சுமார் 300 அடி உயரம் கொண்ட, 1000 படிகளை உடைய, ஒன்றரை கி.மீ. தூரம் கீழே இறங்கிச் சென்று காணவேண்டிய அருவி ஆகாயகங்கை அருவி. இதன் கடைசி படி வரை சென்ற பின்னர்தான் இந்த அருவியை முழுமையாகக் காணமுடியும்.

தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவியாக விளங்குகிறது மாசிலா அருவி. அங்கு அபூர்வ வகையான ரோம விருட்சம், உதிர வேங்கை (சாம்பிராணி), குங்குலிய மரம் இருப்பதைக் காணலாம்.

ரோம விருட்சத்தில் ஓட்டை போட்டு அதில் பழச்சாற்றை ஊற்றி மூடி வைத்துவிட்டு அதை ஒரு மண்டலம் சென்று பார்த்தால் பாரசம் மெழுகுபோல் இருக்கும். அதில் மணி உருட்டி அந்த மணியைத் தொட்டில் சுருங்கி, கல்யாண முருங்கை, கருஊமத்தை, பெருமருந்து (ஈஸ்வரமுளை), திருநீற்றுப் பச்சிலை, பாலாட்டிகள் இலை போன்றவற்றில் புடம் போட இருகும். இந்த மணியை நமது உடலில் இடுப்பிலோ கழுத் திலோ கட்டிக்கொண்டால் தோல் நோய்கள் வராது. சளி வராது. நமது உடல் எப்போதும் மிதமான வெப்பத்துடனேயே இருக்கும். விஷப்பூச்சிகள் நம்மைக் கடித்துவிட்டால் கடி பட்ட வாயில் அந்த மணியை வைத்தால் விஷத்தை இழுத்துவிடும். பிறகு பாலில் மணியைப் போட மணி தூய்மையாகிவிடும்.

கொல்லிமலை

மேலே செல்லச் செல்ல அடுக்கடுக்கான மலைகள் தோன்றும். அங்கு பயணிக்கும் போது குறுக்கே நீரோடை தென்படும் அதில் நீரருந்திவிட்டுச் செல்ல பிறகு தாழமர அருவி இருக்கும். அதில் தாழம்பழம் இருக்கும். பார்ப்பதற்கு பலாக்காய் போல் தொங்கும். தாழம் பழம் மற்றும் விழுது போன்றவற்றைச் சேகரித்துக்கொண்டு மீண்டும் மேலே செல்ல அங்கே அபூர்வ மூலிகைகள் நிறைய தென்படும்.

ஓரிதழ் தாமரை, ஆகாய கருடன், யானை காஞ்சி, எறுசிங்கி, இறங்கு சிங்கி, வெட்டி வேர், விளைமிச்சை வேர், வெண்நாவல், சிறு குறிஞ்சான், சிறுசின்னி போன்ற மூலிகைகள், இன்னும் பெயர் இல்லாத மூலிகைகள் விரவிக் கிடக்கும்.

பதினெண் சித்தர்கள் கூறிய மூலிகை களைப் பறிக்கும்போது அவர்களின் பெயர்கள் நமக்கு நினைவுக்கு வரவேண்டும். ஆகாய கங்கையை நோக்கியபடியே கீழே இறங்கும்போது படிக்கட்டின் பாதி வழியில் இடதுபுறம் ஒரு குகை உள்ளது. இந்தக் குகையின் உள்ளே சென்றால் ஒரு லிங்கம் வைத்து வழிபட்டுவருவது தெரியும். இங்கு மருந்து அரைக்கவும் மருந்து காய்ச்சவும் சித்தர்கள் பயன்படுத்திய இடமாக இருக் கலாம். அடுத்து இன்னும் பல மூலிகைகளை யும் சில நோய்களையும் அதற்கு மருத்துவ முறைகளையும் பார்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button