Siddhar

அண்ணாமலை சுவாமி

அருளை வாரி வழங்கும் திருவண்ணாமலையில் அவதரித்த மாபெரும் சித்தபுருஷரே அண்ணாமலை சுவாமிகள் ஆவார். பல சித்தர்கள் தங்களுடைய இந்த உலகியலில் வைத்த, அழைத்த பெயர்களை எங்கும் யாரிடமும் கூறியதில்லை. அது போல சுவாமிகளின் இயற்பெயரை அறியமுடியவில்லை. இறுதியாக, காளஹஸ்தி சென்று தரிசனம் செய்து விட்டு, வடசென்னை வழியாக வந்த போது, அழகிய வனப்பகுதியில் அங்கிருந்த இலட்சுமிபுரம் சாமியார் மடத்தில் தங்கிவிட்டார். ஞானியர்களுக்கு இறைவன் அவ்வாறே இடங்களை தருவான். அந்தக் காலத்தில் அந்த இடம் வில்வமரங்கள், மாமரங்கள், அரசமரம், வேப்பமரம் அதனை சுற்றி ஓர் ஓடை, ஓர் குட்டை ஆகியன இருந்துள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த காட்டுப்பகுதியில் அண்ணாமலை சுவாமிகள் தவமியற்றி வந்தார். அந்த வேளையில் பல ஞானியர்கள் அங்கு வந்து ஆன்மீக விழிப்புணர்வு அடைய அவரிடம் அளவளாவிச் செல்வதுண்டு.

பல அன்பர்கள் வந்து பொருளுதவி செய்ய வந்தார்கள், ஆனால். சுவாமிகள் தனக்கென்று மாளிகை கட்டிக் கொள்ளவிரும்பியதில்லை, பொன், பொருளை கையால் தொட்டதில்லை, எவரிடமும் யாசகம் பெற்றதில்லை. இது தான் சித்தர்களின் தன்மை. ஆதலால் பற்றுக்களுடன் தனக்கு குடில், பீடங்கள் கட்டிக் கொண்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கும் சாமியார் களிடம் செல்லும்போது கவனமாய் இருங்கள். இந்தக் கால போலி சாமியார்கள் போன்று குறி சொல்லிக் கொண்டு, மக்கள் முன்பு வந்து தன் பெயரில் அடைமொழி வைத்து கொண்டு ஸ்ரீ,ஸ்ரீலஸ்ரீ, சத்குரு என்றெல்லாம் சொல்லி சித்தர்கள் பொன் பொருள் சேர்க்க மாட்டார்கள்.

அந்தச் சாமியார் மடம் சாதி,சமயம்,

இனம் கடந்து வேற்றுமை இல்லாமல் எல்லா உயிர்களும் ஒன்றே என்ற ஆன்ம தத்துவத்தின் அடிப்படையில் இருந்து வந்துள்ளது. காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் அந்த இடத்திற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி மௌனத்திலே சுவாமிகளிடம் ஆன்ம கருத்துக்களை பகிர்ந்த வரலாறும் உண்டு.

சுவாமிகள் அண்ணாமலையில் பிறந்ததாலோ என்னவோ, சிவலிங்கத்தின் மீது அதிகமான பற்று இருந்து வந்தது. அந்தப் பற்றினால், அந்த மடத் திலே, அங்கிருந்த அழகிய வில்வமரத்தின் கீழ் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டு வந்துள்ளார். பின்னர் பாமரமக்கள் அனைவரும் அங்கு வந்து வழிபட ஆரம் பித்தனர். சுவாமிகளிடம் தங்களுடைய பிணியை நீக்குவதற்கும், சுப நிகழ்வுகள் நடத்துவதற்கும் வந்து ஆசி பெற்றனர். அண்ணாமலை சுவாமிகள் கையினில் தரும் விபூதி பிரசாதம் அந்த மக்களின் பிணியை தீர்த்து வைத்தது. சுவாமியின் சக்தியை உணர்ந்து சுற்றிப் பரந்திருந்த பல ஊர் மக்கள் வந்து அருளாசி பெற்று சென்றார்கள். அவ்வேளையில் கொட்டை கட்டி சாமி, காவடி சாமி என்ற இருவரும் சாமியை பார்க்க வந்தார்கள்.  அவர்களிடம் “வேளை வரும்போது உங்களுக்கு உணர்த்தப்படும் வந்து விடுங்கள் ” என்று சொல்லியுள்ளார் அண்ணாமலை சுவாமிகள். பின்பு அவர்கள் சில நாட்கள் தங்கி விட்டு சென்றார்கள்.

சுவாமிகள் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி விட்டு, அதற்கு நான் பொறுப்

பல்ல, எல்லாம் அண்ணா மலையே காரணம் என்பார். அதனாலே சுவாமி களுக்கு அண்ணாமலை என்ற பெயரும் வந்தது என்கிறார்கள். வாரம் ஒரு முறை மடத்தை விட்டு வெளியில் வந்து, நல்ல ஆன்ம அன்பர்களான அந்த ஊர் பெரியவர் இராஜாபாதர் மற்றும் தங்கவேல் என்பவரைச் சந்தித்து உரையாடி செல்வது சுவாமியின் வழக்கம். அப்போது அடுத்த வாரம் நான் உங்களை பார்க்கவரமாட்டேன் என்று சொல்லி சென்றுள்ளார் சுவாமிகள். அந்த நாள் ஜப்பசி மாதம் வளர்பிறை, அஷ்டமி திதி, திருவோணம் நட்சத்திரம் நாளன்று இறைவனிடம் கலந்தார். சுவாமிகள் ஜீவசமாதியான நேரத்தை உணர்ந்து அந்த கொட்டைகட்டி சாமியும், காவடி சாமியும் சரியான நேரத்திற்கு வந்து சுவாமிகளை சமாதி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வணங்கினர். இன்றும் அண்ணா மலை சுவாமிகளின் ஜீவசமாதி பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button