அருள்வெள்ளம் பொங்கும் பரஞ்சோதி பாபா

சென்னை வடபழனி முருகன் கோயிலின் அருகில் அருளாசி வழங்கி, பலருடைய பாவங்களை ஏற்று, மானிடர்களுக்கு பெரும் சேவையாற்றி ஏகனின் பாதத்தில் வெட்டவெளியில் இறைவனுடன் கலந்தவர் பரஞ்சோதி பாபா…

அருள்வெள்ளம் பொங்கும் பரஞ்சோதி பாபா

சென்னை வடபழனி முருகன் கோயிலின் அருகில் அருளாசி வழங்கி, பலருடைய பாவங்களை ஏற்று, மானிடர்களுக்கு பெரும் சேவையாற்றி ஏகனின் பாதத்தில் வெட்டவெளியில் இறைவனுடன் கலந்தவர் பரஞ்சோதி பாபா என்றால் மிகையாகாது. தம்மை நாடி வருகின்ற மானிடர்களை நல்-வழிப்படுத்தி, இறை-நிலையை அடைய வழியும் காட்டி தந்து, இன்றும் சிலருடன் சூக்குமமாய் அருள் பாலிக்கின்றார் பரஞ்சோதி பாபா!

இளம் வயதிலிருந்தே ஆன்மீக எண்ணம் கொண்டவராய் இருந்தார் பாபா. பின்னர் திரைப்படத் தொழிலிலும் ஈடுபட்டார். இறையாற்றல் அவரிடம் பொங்கித் தழுவ ஆரம்பித்தது. சுவாமியின் தரிசனம் காண இசைஞானி இளையராஜா முதல் பல முன்னணி சினிமாக் காரர்களின் படைகள் வரத் தொடங்கியது. வந்தவருக் கெல்லாம் வாரி வழங்கி, தாமே பரமாக திகழ்ந்த பரஞ்சோதி பாபாவின் மகிமைகள் எண்ணி லடங்காதது. ஆம்! பாபாவின் படத்தை மட்டும் வைத்து பூசை செய்து, குழந்தைப்பேறு பெற்ற பக்தர்கள் பலருண்டு. சாதாரணமாக இருந்த இன்றைய உலகப்புகழ் ட்ரம்ஸ் மாஸ்டர் சிவமணி போன்றோர் பாபாவின் பரிபூரண அருளினால் வளர்ந்துள்ளார்கள், வளர்ந்து வருகின்றார்கள்.

அன்பர் ஒருவர் பிரயாணக்களைப்பில் நான்கு சக்கர வண்டியை ஓட்டும் போது தூங்கி விட்டார்! திடீரென்று விழிப்பு வந்துள்ளது. ஐயோ! பாபா, என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறிக் கொண்டே, கூக்குரல் போட்டு கத்தியுள்ளார். மின்னல் வேகத்தில் ஒரு பேருந்து, அன்பரின் மகிழுந்ததை(கார்) பதம் பார்த்தது. வண்டி நொறுங்கியது! சிறுகீரல் இல்லாமல் அன்பர் தப்பி இருந்தார். அடுத்த நாள் பாபாவைக் காண வரும்போது, பாபா! எல்லாம் நடந்தது, உன்னுடைய உயிரைக் காப்பாற்றி விட்டேன்! வேறென்ன? என்றார். இதுதான் பாபா! இவர்தான் குரு! இப்படி ஒவ்வொரு அன்பருக்கும் பாபாவின் அன்பு நிலைத்து இருக்கின்றது.

பல ஏழை எளிய மக்களுக்கு அருளாசி வழங்கி மிகப்பெரிய செல்வந்தர்களாக மாற்றி இருக்கின்றார். சித்தர்கள் பூத உடலை மறைத்து ஜீவன் முக்தி அடைந்த பின்பு, அவர்களின் ஆற்றல் அதே போன்று இருக்கும் என்பதனை உணராமல், சில பக்தர்கள் பல இடங் களுக்கு எதையோ தேடி ஓடுகிறார்கள். ஜீவன் முக்தர்களின் சமாதியில் பெருத்த ஆற்றல் குடி கொண்டிருக்கும்!  தற்போது பாபாவின் ஜீவ சமாதி எழுப்பட்டு வருகிறது. நல்ல ஆன்ம நண்பர்கள் ஜீவ சமாதி திருப்பணியில் பங்குகொள்ள முயலுங்கள்.