பரம்பொருள் பாம்பன் சுவாமிகள்

எய்தற்கரிய அருட்சுடரை இதயத்தில் கொண்டு செய்தற்கரிய திருநூல்கள் பல இயற்றி உய்தற்கரிய வழி உணர்த்திய பெருமான் பாம்பன் சுவாமிகள் ஆவார். இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் எனும் சிற்றூரில்…

பரம்பொருள் பாம்பன் சுவாமிகள்

எய்தற்கரிய அருட்சுடரை  இதயத்தில் கொண்டு செய்தற்கரிய திருநூல்கள் பல இயற்றி உய்தற்கரிய வழி உணர்த்திய பெருமான் பாம்பன் சுவாமிகள் ஆவார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் எனும் சிற்றூரில் பிறந்தவர்தான் பாம்பன் சுவாமிகள். இவரது இளமைப்பெயர் அப்பாவு. சாத்தப்பபிள்ளைக்கும் செங்கமல அம்மை தம்பதிக்கும் கி.பி.1857ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைதான் சுவாமிகள்.

பள்ளியில் அப்பாவு படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சந்நியாசி ஒருவர் கந்த சஷ்டிக் கவசத்தை கொடுத்துச் சென்றார். கந்த சஷ்டிக் கவசத்தைப் போல, நானும் ஏன் பாடக்கூடாதென எண்ணிய அப்பாவு ஒருநாள் ஒரு தென்னந்தோப்பில் கத்தி கொண்டு பனை ஓலையை எழுத்தாணிக் கத்தி கொண்டு சீவி ஏடாக்கி, குமாரபகவானே.முருகப்பெருமானே. அருணகிரிக்கு அருளியது போல அடியேனுக்குள் அருள வேண்டும். உன்னையே என்பாடல் பொருளாக்க வேண்டும். அருள்வாய் குகனே என பிரார்த்தித்து எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதத் துவங்கினார்.

‘கங்கையைச் சடையிற்பறித்து’ எனும் மங்களமொழி மனதில் தோன்ற பிரவாகமாகியது. பாடல் பொங்கியது. குமரகுருதாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டு குளக்கரை கடற்கரை என பாம்பனில் பல இடங்களுக்கும் தனியே சென்று தியானித்து வந்தார். பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமானை நாளும் பொழுதும் பாடிக் களித்து வந்த குமரகுருதாசனுக்கு இருபத்தேழாம் வயதில் திருமணம் செய்வித்தனர். அவரது பெற்றோர்கள் திருமணம் செய்த போதிலும் இல்லறத்தில் நாட்டமின்றி பாம்பனில் இருந்து வந்த காலத்தில் பல்வேறு அற்புதங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தன. திருமணம் முடித்தலுக்கு முன்பு ஒரு நாள் இவரது கனவில் அழகிய திருமேனிச் சைவரொருவர் தோன்றினார். பாம்பன் சுவாமிகளை ஒன்றரைமைல் தூரம் வரையிலும் அவர் அழைத்துச்சென்று ஒரு கட்டடத்தில் நுழைந்து வாழையிலை விரித்து அன்னமும் பாலுமிட்டு பிசைந்து “அன்பா! என்னோடு இதனை உண்பாயாக” என்று கூறினார்.

பாம்பன் சுவாமிகளும் அந்த சைவப்  பெரியவர் வேண்டுகோளுக்கிணங்க அந்த அன்னத்தை உண்டார். அதன்பின் அவர் “அன்பா! இனி நீ உன் இருப்பிடம் நோக்கிச் செல்வாயாக” என்று கூறி மறைந்து விட்டார். கனவினில் பாலன்னம் உண்டபாம்பன் சுவாமிகளுக்கு கவிபாடும் சக்தி அதன்பின் அருவியாகக் கொட்டியது. பாம்பன் சுவாமிகளுக்கு முருகைய பிள்ளை என்ற மூத்த மகனும் சிவஞானம்மாள் என்ற பெண்ணும் குமரகுருதாச பிள்ளையென்று இன்னுமொரு ஆண் பிள்ளையும் பிறந்தனர்.

இவர் பாடியருளிய ‘சண்முக கவசம்’ மக்களிடையே பெரும் புகழ்கொண்டது. சுவாமிகளுக்கு நிறைய சீடர்கள் பெருகினர். ஒரு விநாடியும் நெஞ்சில் நீங்காத முருகப் பெருமானை பல்வேறு செய்யுள் நூல்களால் பாடிக்களித்துப் பரவசம் கொண்டார் சுவாமிகள். ஒருமுறை வாந்திபேதி என்னுமொரு நோய் மூன்று நாட்கள் சுவாமிகளைப்பற்றி ஆட்ட இறந்த சவம் போலாகி விட்டார் அவர். நள்ளிரவுப் பொழுதில் அவரது மனைவி காளி