கடவுள் வெளியில் இல்லை..

இயற்கையான வாழ்க்கையில், எல்லா உயிர்களும் இயற்கையாகவே வாழ்கின்றன. ஒவ்வொரு உயிர்க்கும் ஆண், பெண்கள் என்ற இணைப்பும் படைக்கப்பட்டு இருக்கிறது. பஞ்ச பூதங்களின் சக்தியான ஆற்றலை உணர்ந்து, ஒவ்வொரு…

கடவுள் வெளியில் இல்லை..

இயற்கையான வாழ்க்கையில், எல்லா உயிர்களும் இயற்கையாகவே வாழ்கின்றன. ஒவ்வொரு உயிர்க்கும் ஆண், பெண்கள் என்ற இணைப்பும் படைக்கப்பட்டு இருக்கிறது. பஞ்ச பூதங்களின் சக்தியான ஆற்றலை உணர்ந்து, ஒவ்வொரு உயிர்களும் சிறப்போடு வாழ்கின்றன. அந்த பிரபஞ்சத்தோடு தம்மைப் பிணைத்துக்கொண்ட சிலரே சித்தர்கள். அந்த புண்ணிய சீலர்களே, தாம் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் என்ற நோக்கில், ஞானத்தினால் விளைந்த கண்டுபிடிப்புக் களை நமக்காக அருள் செய்துள்ளனர். அத்தனையும் அவர்களின் இயல்பினால் கிடைக்கப்பட்டுள்ளது.

சிவம் ஒன்று, பிறப்பான ஆண், பெண் இரண்டு,  கடவுள்கள் மூன்று, நியமங்கள் நான்கு, பூதங்கள் ஐந்து, ஆதாரங்கள் ஆறு, நிலைகள் ஏழு,  அஷ்ட கருமங்களான 1.வசியம், 2. மோகனம்,  3. ஆகர்சணம், 4. தம்பனம், 5. பேதனம், 6. வித்வேசணம், 7. உச்சாடனம், 8. மாரணம் என்ற எட்டு வித செயல்களையும் படைத்தவர்கள் சித்தர்கள். மற்றபடி கடவுள் என்ற தன்மை வெளியில் இல்லை. நீங்களே கடவுளாகலாம் என்று, உலகோர் யாவரும் பயனுள்ள கடவுளர் வாழ்வை வாழ்வதற்காக முன்மொழிந்தனர். இத்தகைய சித்தர்கள் வாழ்ந்த நாட்டில், நாமும் வாழ்கின்றோம் என்று பெருமிதம் கொள்வோமாக.

சித்தாந்தத்தின் இயல்பை மறைத்து, சித்தர்களின் பெயரிலே சாதியை வைத்து, தவறான புரிதலில் சாதியை உருவாக்கி, பாதகம் செய்து விட்டனர். சில பாடல்களில் சித்தர்கள் இந்தந்த சாதியென்று சொல்லப் பட்டிருக்கும், அது தொழில் சார்ந்து சொல்லப்பட்டது, மற்றும் வாசியின் நிலையைக் குறிப்பதாகும். மனிதர்கள் புரிதல் இல்லாமல் வீண் பேதம் பார்த்ததால் சில சமயங்கள் உருவாகின. அந்த சமயங் களால் போர் நடத்தப்பட்டன, உயிர்ப்பலி நிகழ்ந்தன. இன்பம் நிறைந்த வாழ்வில் துன்பம் துவங்கி விட்டது. அந்த வினைகளை அறுக்கவே பிறப்புக்கள் தொடர்கின்றன.

இப்போது மனிதர்களுக்கு இன்பமும் துன்பமும் வேறாகத் தெரிகின்றன. அதிலிருந்து பேதமின்றி விலகி இயற்கையோடு ஒன்றும்போது, ஞானமெனும் மூலம் அறியப்படுகிறது. அந்த இயற்கையை உணர்ந்தவர்களே, அதனை வகுத்ததுவே நமசிவாயம் எனும் பிரபஞ்ச மூலம்தான் என்பதனை உணர்வர். ஆக ஞானமான வாழ்க்கையில் நீங்கள் பயணிக்க வேண்டுமென்றே, பிரபஞ்சம் உங்களை மாற்ற முயன்றுகொண்டே இருக்கிறது. காலத்தின் கட்டாயம் இயல்பாக கிடைக்க வேண்டிய பிரபஞ்ச அனுகிரகம், இக்கால தர்மசக்கரத்தின் அடிப்படையில், சோதனையாலே கிடைக்கப் பெறுகின்றது.

ஆதலின் உங்களின் உயிரினை வதைத்தது எதுவோ, அது எதுவாக இருந்தாலும், அது சோதனையின் பயன் தான், உங்களையே உண்மையான குருவாக மாற்றுகிறது என்று நம்புங்கள். அந்த குருவானது, சக்தியை வதைத்து, மன இயக்கத்தை நிறுத்தும். ஏனெனில் சக்தியானது தூண்டக்கூடிய ஒன்று, அடங்காதது. ஆக “நான்” என்பது  அடங்கித்தான் அது வெளிப்படும். அத்தகு தருணங்களில் அமைதியாக இருங்கள். இன்பமோ, துன்பமோ முக்கியம் அல்ல என்று உதருங்கள். உலகத்தில் அனுபவிக்கும் துன்பமே சிவ இன்பம். அதுவே தேவையற்றதை அறுத்தெரிந்து நிம்மதியான ஆனந்தம் தரும். நின்ற இயக்கத்தின் ஒடுக்கமே சதாசிவமான பரமசிவம் என்பதனை உணருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிலவற்றால் பயம் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையே பயமாக இருக்கக்கூடாது, அது நரகம். உங்களை அடிமைப்படுத்த இந்த உலகம் கையில் எடுக் கும் ஆயுதம், ஒன்று பயம் மற்றொன்று ஆசை. ஆக நன்றாக சிந்தியுங்கள்,  இவைகளே  உங்களை ஆட்டிப்படைத்து  அடிமைப்படுத்தி இருக்கிறது. வீண் பயமும், வீண் ஆசையும் உங்களை நாசம் செய்யும் தொற்றுக்கள். உங்களை நீங்களே இழக்கவும் இதுவே காரணமாக இருக்கிறது. கருமங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அது தொடர்புநிலை. அதாவது அப்பாவி மக்களின், ஏழை எளியோனின் உழைப்பைச் சுரண்டி, அவனை அடிமைப்படுத்தி, தன்னைத்தானே உலக முதலாளியாக நிறுவிக்கொள்ள, இன்று ஏகாதிபத்யம் செய்யும் கார்ப்பரேட் மனிதர்கள் அரக்கர்கள். அந்த பாதகர்களை ஆதரிக்கும் ஆளுமையான அடிமைகள், துர்சக்திகள். இந்தப்பாவிகளுக்கு துணைபோகும் வணிகப் பேராசை பக்திமான்கள் தீயசக்தி கள். இப்படியானோரை, உங்களின் அறி வீனத்தால் நீங்கள் ஏற்றுக்கொண்டதால் சகல ஜீவன்களும் துன்புறுகின்றன. அந்த பாவமே, உங்களின் கொடும் பிறவிகளுக்கு காரணமாக அமைகின்றது. ஆக  இயற்கைக்கு பாதகம் இல்லாத பணியை செய்ய வேண்டும், தற்சார்போடு வாழ வேண்டும் என்பதே சித்தத்தின் வழி.

ஆதலின் ஆசையே துன்பத்துக்கு காரணம். துன்பமே பயத்துக்கு காரணம். பணம் இருந்தாலும் பயந்து வாழும் காரணம், ஆசையே. இவ்வுலகில் இன்பப்படவும், ஆனந்தப்படவும்  ஒன்றையொன்று உள்ள தெனில் அது நம் சீவனான “உயிர்” மட்டுமே. அதை நீங்கள் போற்றிக் கொண்டாடி அன்பு செய்வீரானால், அது ஆனந்தப்பட்டு சிவமாகும். பின்னர் அதுவே அன்பாகி, அனைத்தையும் உறவாடி அன்பு செய்யும்.  உலகம் உய்யவும், வாழ்வு சிறக்கவும், ஆனந்த வாழ்வுக்கும், அதுவே சிவானந்த போதம்.

தன் உடம்பை படைத்து, மனதை வகுத்து உடல் உறுப்புக்கள் அனைத்தும் படைத்து, உயிரைக் காத்து, வாழ்வை வகுத்து,  உண்ட உணவு செரித்து, இன்பப்படுத்தும் தன் உயிரான (சீவனை), ஏன் நம்ப மறுக்கின்றீர் கள். உங்கள் நோயை அதுமட்டுமே சரி செய்கிறது. ஏனென்றால் உணவே அதற்கு மருந்து. பசி என்பது உறுப்பின் மொழி. வலி என்பது உடலின் மொழி. மனச்சோர்வு என்பது உயிரின் மொழி.  உங்களுக்காகவே எந்த எதிர்ப்பார்ப்புமின்றி இல்லாமல் உழைக்கும் அதன் மொழியறியாது, எதைப்படித்து என்ன?

என்ன செய்யப் போகிறீர்கள் ஆன்ம உறவுகளே. நம்பாது அதை அலட்சியம் செய்யும் வேடிக்கை மாந்தர்களைக் கண்டு, கண்டுகொள்ளாத மாந்தரை மரணம் கண்டுகொள்ளும். உன்னை உணராது போனதால், உயிர் போனதே நமசிவாயா என்று ஆன்மா புலம்பும்.. ஆக விழித்துக்கொள் விழுப்புண் படாமல்…

ஆதி தன்னை பற்றித்தான் அறிய வேண்டும்  என்பதற்கான சோதனைக்கூடமே, இந்த உலகம். அறியப்படும் சோதனையில், ஆதியானது தன் தன்மையைக் கொண்டே அதனை உணரமுடியும். ஆதி தன் மயமான தன்மையிலே, அனைத்து  சோதனைப் பொருளும் இருக்கும். அப்போதுதான் அது அதை உணரமுடியும். தன் தன்மை என்பது குரு!!  தன்மயமாக உணர்ந்தது திரு!! சோதனைப்பொருள் தான் நான்(ஆணவம்), அதுவே தன்னை “நான் தான்” “நான் தான்” என்று வேடம் போட்டு, இயற்கைக்கு மாறாக எப்படியெல்லாம் நடித்து இன்பப்பட்டு, துன்பப்பட்டு, கத்தி கதறி உருண்டு

பிறண்டு அழுது புலம்பி, வஞ்சகம் செய்து ஏய்த்துப் பிழைத்து, பெருமைப்

பட்டு, சிறுமைப்பட்டு வீழ்ந்து போகும். ஆதலின் அனைத்தும் உங்களின் “நான்” என்பதன் சோதனை. எலியானது சோத னைக்கு மட்டுமே, அதுவொரு சோதனைப் பொருள். அது அழிந்தால் மட்டுமே, சோதனை முடிவுக்கு வரும். ஆக “நான்” என்ற எலியை அழித்து விடுங்கள். ஆணவத்தை அழித்து அன்பைப் பெருக்குங்கள். பின்பு குரு விளங்கும், அதனால் திரு அடங்கும்.